வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட மருத்துவ உபகரணம் - தனியார் மருத்துவர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு
தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் வயிற்றில் மருத்துவ உபகரணத்தை வைத்து தைத்த தனியார் மருத்துவர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் வயிற்றில் மருத்துவ உபகரணத்தை வைத்து தைத்த தனியார் மருத்துவர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் கருப்பை கட்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு அவருக்கு வயிற்றில் தொடர்ந்து வலி ஏற்படவே மருத்துவமனைக்கு மீண்டும் சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்யாமல் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரின் வயிற்றில் மருத்துவ உபகரணம் ஒன்று இருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக செயல்பட்ட 6 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story