பாலியல் புகாருக்கு ஆளான மூத்த பேராசிரியர் - கட்டாய ஓய்வு அளித்த நெல்லை பல்கலைக் கழகம்

நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில், பாலியல் புகாரில் சிக்கிய மூத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
பாலியல் புகாருக்கு ஆளான மூத்த பேராசிரியர் - கட்டாய ஓய்வு அளித்த நெல்லை பல்கலைக் கழகம்
x
நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில், பாலியல் புகாரில் சிக்கிய மூத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 துணை பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தும் பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் மீதான  பாலியல் புகார் உண்மை என்பது விசாரணையில் தெரியவந்ததால், அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்க ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆங்கில துணை பேராசிரியர்கள் ஜெனிதா, பூவலிங்கம், ரமேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவும் நேற்று நடந்த ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்