இ-டெண்டர் ஒப்பந்தங்கள் மூலம் ரூ.750 கோடி ஊழல் - ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு...
சென்னை மாநகராட்சி மூலம், இ-டெண்டர் மூலம் விடப்படும் ஒப்பந்தங்களின் மூலம் 750 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி மூலம், இ-டெண்டர் மூலம் விடப்படும் ஒப்பந்தங்களின் மூலம் 750 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை, பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து
பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ், இணைய வழியில் அனுப்பப்படும், விண்ணப்பங்கள், போட்டி ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த புள்ளியை தெரிவிக்கும் நிலையில் உள்ளதாகவும் இது ஆரோக்கியமான முறை இல்லை எனவும் தெரிவித்தார். எனவே, ஒப்பந்தங்கள் சட்டத்துக்கு புறம்பானவை என்றும், இதனை உடனே ரத்து செய்ய வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
Next Story