7 பேர் கொண்ட மத்தியக்குழு சென்னை வருகை : புயல் பாதித்த பகுதிகளில் 2 நாள் ஆய்வு
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட, 7 பேர் கொண்ட மத்தியக்குழு இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தது.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட,7 பேர் கொண்ட மத்தியக்குழு இரவு 8.30 மணி அளவில், சென்னை வந்து சேர்ந்தது. கஜா புயலால், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக பிரதமர் மோடி, உறுதி அளித்திருந்தார். இதன்படி, மத்திய குழு சென்னை வந்து சேர்ந்தது. நாளை, சனிக்கிழமை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, காலை 10 மணிக்கு மத்திய குழுவினர் சந்திக்கிறார்கள். இதன்பின்னர், ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள், புயல் பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட முடிவு செய்துள்ளது. மத்திய குழுவின் பரிந்துரைக்குப்பின்னரே, கஜா புயல் நிவாரண தொகை அறிவிக்கப்படும்.
கஜா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு
கஜா புயல் பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், ஆர்.பி, உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்திய குழு, தமிழகம் வருவதால், எங்கெங்கு பார்வையிட அழைத்து செல்வது - பயண திட்டம் - மக்கள் சந்திப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story