புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
* நாகை மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ஷகீல் அக்தர், திருவாரூர் மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தாமரைக்கண்ணன் ஆகியோரும்,
* தஞ்சை மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் ரவி, பாதிப்படைந்த ரயில்வே பகுதிகளை சீரமைக்க கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் இந்த மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரையும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்...
Next Story