மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்லத் தடை - கடலோர மாவட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
கஜா புயலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கடலோர மாவட்ட மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கடலோர மாவட்ட மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் தொடர்பான தகவல்கள் அனைத்து கடலோர மற்றும் உள்நாட்டு மீன்துறை இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றும், மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பத் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story