கத்தாரில் உயிரிழந்த இளைஞர் - 15 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம்
15 நாட்களுக்கு முன் கத்தாரில் உயிரிழந்த ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்த கோகுல்நாத்தின் உடல், தமிழக அரசின் உதவியுடன் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
15 நாட்களுக்கு முன் கத்தாரில் உயிரிழந்த ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்த கோகுல்நாத்தின் உடல், தமிழக அரசின் உதவியுடன் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. கோகுல்நாத்துக்கு திருமணமாகி மனைவியும், 5 வயதான ஒரு மகளும், பிறந்து ஐந்து மாதங்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது. கோகுல்நாத் மாரடைப்பால் இறந்து விட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அவரது குடும்பத்தார் சேலம் மாவட்டம் ஆட்சியரிடம், உடலை மீட்டு ஒப்படைக்க கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கோகுல்நாத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்திய பின் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story