மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக மோசடி : 25 லட்சம் மோசடி செய்த போலி நீதிபதி உட்பட 2 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் பூங்காநகரை சேர்ந்த பசுபதி என்பவர் தனது மகன் லோகேஸ்வரனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் சீட்டு கேட்டு, விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மற்றும் கேரளா மாநிலம் திரிசூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணமேனன் ஆகியோரை அணுகியுள்ளார்.
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக மோசடி : 25 லட்சம் மோசடி செய்த போலி நீதிபதி உட்பட 2 பேர் கைது
x
திருவள்ளூர் மாவட்டம்  பூங்காநகரை சேர்ந்த பசுபதி என்பவர் தனது மகன் லோகேஸ்வரனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் சீட்டு கேட்டு, விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மற்றும் கேரளா மாநிலம் திரிசூர் பகுதியை சேர்ந்த  பாலகிருஷ்ணமேனன் ஆகியோரை அணுகியுள்ளார். பாலகிருஷ்ணமேனன் கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமைய்யா மருத்துவ கல்லூரியில் மெடிக்கல் சீட்டு வாங்கி தருவதாக கூறி 25 லட்சம்  ரூபாய் பணத்தை பசுபதியிடம் வாங்கி மோசடி செய்துள்ளார். பசுபதி  அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்