திருச்சி நிதி நிறுவன ஊழியர்களிடம் காரில் பின்தொடர்ந்து ரூ. 1 கோடி கொள்ளை
திருச்சியில், பரபரப்பான சாலையில் நிதி நிறுவன ஊழியர்களிடமிருந்து ஒரு கோடி பணத்தை, மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த முருகேசன் என்பவர் 'ஏவிஎம் பைனான்ஸ்' என்ற பெயரில், சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருச்சியில் உள்ள நபருக்கு கடன் வழங்குவதற்காக அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர், ஒரு கோடி ரூபாய் பணத்துடன் திருச்சி வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் இருவரும் பாலக்கரையில் உள்ள தங்களது கிளை நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, தலைமை தபால் நிலையம் அருகே, அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், ஒரு கோடி ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளது. பரபரப்பான சாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story