காதல் திருமணம் செய்துக்கொண்ட காதலன் மாயம் : தேடி சென்ற மனைவியை தாக்கிய கணவன் குடும்பத்தினர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூரை சேர்ந்த கார்த்தி மற்றும் ஜெயசுதா காதலித்து பெற்றோர் விருப்பமின்றி கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்துக்கொண்ட காதலன் மாயம் : தேடி சென்ற மனைவியை தாக்கிய கணவன் குடும்பத்தினர்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூரை சேர்ந்த கார்த்தி மற்றும் ஜெயசுதா காதலித்து பெற்றோர் விருப்பமின்றி கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு சென்ற கார்த்தி பிறகு வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த ஜெயசுதா அங்கு சென்றுள்ளார். ஆனால் கார்த்தியின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதால் தொடர்ந்து 3 தினங்கள் ஜெயசுதா அங்கேயே காத்திருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தியின் குடும்பத்தார் ஜெயசுதாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். காயம் அடைந்த அவர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்