மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் கங்கை போன்ற புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம்.
ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் கங்கை போன்ற புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். இந்த விழா மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காவிரி துலா உற்சவத்தின் முதல் நாளையொட்டி மயூரநாதர் ஆலயம், விஸ்வநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம் மற்றும் ஐயாரப்பர் ஆலயங்களில் இருந்து சுவாமிகள் அம்பாளுடன் புறப்பட்டு காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Next Story