"மதுரை நகரம் நீதியின் அடையாளமாக திகழ்கிறது" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு
மதுரை நகரம் கோவில்களின் அடையாளம் மட்டுமல்ல நீதியின் அடையாளமாகவும் திகழ்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மதுரை நகரம் கோவில்களின் அடையாளம் மட்டுமல்ல நீதியின் அடையாளமாகவும் திகழ்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 14ஆம் ஆண்டு விழா, வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் இலவச கண் சிகிச்சை முகாமையும் அவர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதி வழங்குவதில் நீதிபதிகளுக்கு மட்டுமின்றி வழக்கறிஞர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளதாக கூறினார். மதுரை கோவில் நகரம் மட்டுமல்ல நீதியை வழங்குவதிலும் சிறந்த நகரம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Next Story