வவ்வால் தோப்பு - சேலத்தில் ஓர் வினோத ஊர்...

பல ஆண்டுகளாக கூட்டம் கூட்டமாக வாழும் வவ்வால்கள் வவ்வால்களை வணங்கி செல்லும் மக்கள்
வவ்வால் தோப்பு - சேலத்தில் ஓர் வினோத ஊர்...
x
சேலம்  நகருக்குள்  வவ்வால்கள்  செறிந்து வாழ்கின்றன.  அம்மா பேட்டை பகுதியில், மரத்தில் காய், கனிகள் தொங்குவது போல, மரம் முழுக்க வவ்வால்கள் தொங்குகின்றன. பார்ப்பதற்கு அரிதான உயிரினமான வவ்வால்கள், கூட்டம் கூட்டமாக இருந்தும், மக்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுப்பதில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.  
வவ்வால்களை  தெய்வங்களாக வணங்கி செல்லும் மக்களும் இப்பகுதியில் உண்டு. வவ்வால்களை காண மக்கள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அம்மா பேட்டையில், 71 லட்சம் ரூபாய்  செலவில் பூங்கா ஒன்றை நிறுவ உள்ளது தமிழக அரசு. இந்த பூங்காவிற்கு கூட வவ்வால் பூங்கா என்றே பெயர் சூட்ட உள்ளதாக அம்மா பேட்டை பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்