கோவில்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்
12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்னமாட்டு வண்டி போட்டியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டி முதலிடத்தை கைப்பற்றியது.
கோவில்பட்டியில் அருகேயுள்ள விளாத்திக்குளம் பத்திரகாளியம்மன் கோவில்திருவிழாவையொட்டி சின்னமாடு, பூஞ்சிட்டு என்ற இரு பிரிவுகளின் கீழ் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சின்னமாட்டு வண்டி போட்டியில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாட்டுவண்டி முதலிடத்தை கைப்பற்றியது. அதேபோல, 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில், உள்ளூர் மாட்டு வண்டியான, விளாத்திக்குளம் மாட்டுவண்டி முதலிடத்தை தட்டிச்சென்றது. சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற ஊர்மக்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
Next Story