சென்னையில் 52 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி போலீசில் சரண்
என்கவுன்ட்டருக்கு பயந்து சரணடைந்ததாக தகவல்
சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். தாம்பரம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற ரவுடி மீது சேலையூர், பீர்க்கன்காரணை, கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 52-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சூர்யாவின் கூட்டாளிகள் 6 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், சேலையூர் உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலையில், தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் ரவுடி சூர்யா சரண்அடைந்துள்ளார். அவரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, கழிவறை சென்றவர் தடுக்கி விழுந்து கால் உடைந்துள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி சூர்யா, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story