6-வது மனைவியை கொடுமைபடுத்திய கணவன் கைது

5 பெண்களை திருமணம் செய்ததை மறைத்ததாக புகார்
6-வது மனைவியை கொடுமைபடுத்திய கணவன் கைது
x
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வரதட்சணை கேட்டு 6-வது மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அங்குள்ள புதுரெட்டியூரைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பூபதிக்கும், சங்ககிரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. 2 மாதங்கள் கடந்த நிலையில், கணவரின் குடும்பத்தார் 10 சவரன் நகை, 60 ஆயிரம் பணம் கேட்டு, கிருஷ்ணவேணியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கோபம் அடைந்த அந்த பெண், அருகில் வசிப்பவர்களிடம் கணவரின் குடும்பத்தினர் குறித்து விசாரித்துள்ளார். அதில், பூபதிக்கு ஏற்கனவே ஐந்து திருமணங்கள் நடந்தது தெரியவந்துள்ளது. ஆத்திரம் அடைந்த கிருஷ்ணவேணி, சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பூபதியை கைது செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள மாமனார், மாமியாரை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்