சிவகங்கையில் 120கிலோ கெட்டுப்போன இறைச்சி..அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம் | Sivagangai | Tamilnadu
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறையினர், 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 50 கிலோ புரோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மானாமதுரை யூனியன் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், மெயின் ரோடு ஆகிய இடங்களில் உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு கடைகளில் கெட்டுப்போன இறைச்சி மூலம் உணவு தயாரிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் 120 கிலோ கெட்டுப்போன இறைச்சி, 50 கிலோ கெட்டுப் புரோட்டா ஆகியவற்றையும், பேக்கரி ஒன்றில் இருந்து, கெட்டுப்போன பிரட் வகைகளையும் கைப்பற்றினர்.
Next Story