இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2023)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்.....நேரில் ஆஜராகக்கூறி அவரது வீட்டில் நோட்டீஸ் ஓட்டினர்...
தமிழ்நாட்டில் உரிமம் பெறாமல் உணவகங்கள், சிறுகடைகளில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்......மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை எச்சரிக்கை....
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவை முடக்கியது அமலாக்கத்துறை.....முன் அனுமதியின்றி சொத்துக்களை மாற்றவோ, விற்பனை செய்யவோ கூடாது என எச்சரிக்கை....
மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறையை தடுக்காமல் விட்டுவிட்டார் பிரதமர் மோடி......ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., குற்றச்சாட்டு......
மக்களவையில் ராகுல்காந்தி "ஃபிளையிங் கிஸ்" கொடுத்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு.....மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள், பெண் அமைச்சர்கள் புகாரளித்ததால் சலசலப்பு....
நாட்டில் சிறுபான்மையினர், பழங்குடியினர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது வரலாறு காணாத அளவுக்கு தாக்குதல்....மக்களவையில் சிபிஐ எம்.பி. சுப்பராயன் புகார்......
பாண்டியன் செங்கோல் பற்றியும், கண்ணகியின் வரலாறு பற்றியும் பாஜகவுக்கு தெரியுமா என திமுக எம்.பி., கனிமொழி கேள்வி....இந்தி திணிப்பை விட்டு விட்டு சிலப்பதிகாரத்தை படிக்குமாறு மக்களவையில் ஆவேசம்...
மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முதல் நாளில் இருந்தே அரசு தயாராக இருந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்....வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது இல்லை என்றும் பேச்சு....
மக்களவையில் 37 நிமிடங்கள் ராகுல்காந்தி உரையாற்றிய நிலையில், 14 நிமிடங்கள் மட்டுமே அவரது முகத்தை நாடாளுமன்ற தொலைக்காட்சி காட்டியதாக குற்றச்சாட்டு.....பிரதமர் நரேந்திர மோடி எதைக் கண்டு அச்சப்படுகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி சரமாரி கேள்வி...
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது....தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி குற்றச்சாட்டு...
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு.....ராகுல்காந்தியை பேச விடாமல், பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் கடும் அமளி.....
மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என மத்திய உள்துறை அமித்ஷா வேண்டுகோள்.....மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளித்ததால், மணிப்பூர் முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் விளக்கம்.....
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்....மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கையை ஏற்று நடவடிக்கை...