இந்தியா பாகிஸ்தான் போட்டி... மாற்றப்பட்ட தேதி..? - வெளியான முக்கிய தகவல்
இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஷா, உலகக்கோப்பை போட்டி தேதிகளை மாற்றக்கோரி 3 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நல்ல உடற்தகுதியை அடைந்துள்ளதாகவும், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார் எனவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
Next Story