ஆகஸ்ட் 7 - தேசிய ஈட்டி எறிதல் தினம் : நீரஜ் சோப்ரா சாதனைக்கு அங்கீகாரம் - தேசிய தடகள சம்மேளனம் அறிவிப்பு
நீரஜ் சோப்ராவின் சாதனையை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ஈட்டி எறிதல் தினம் என கடைபிடிக்கப்படும் என இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்
அவரது சாதனையை போற்றும் விதமாக, தங்கம் வென்ற தினமான ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேசிய தடகள சம்மேளனம்
ஈட்டி எறிதல் போட்டியை நாடு முழுவதும் விரிவுப்படுத்தி, இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய அளவில் போட்டி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது
சம்மேளனத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து நிர்வாகங்களையும் ஒன்றிணைத்து மாநில வாரியாக போட்டி நடத்தப்படும் என தேசிய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது..
இதோடு நிற்காமல் கிராமங்களையும் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
இதற்கு தேவையான ஈட்டிகளை சம்மேளனமே வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Next Story