4 நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு, விராட் கோலி எதிர்ப்பு

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் ஐ.சி.சி-யின் பரிந்துரைக்கு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு, விராட் கோலி எதிர்ப்பு
x
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் ஐ.சி.சி-யின் பரிந்துரைக்கு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி நடைபெறுவதையொட்டி கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அப்போது, குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த விவகாரம் பற்றி தனக்கு முழுமையாக தெரியாத காரணத்தால், பொறுப்பற்ற முறையில் கருத்து கூற விரும்பவில்லை என்று விராட் கோலி பதிலளித்தார்.

பீல்டிங் பயிற்சியின் போது கோலிக்கு காயம் - போட்டியில் களமிறங்குவாரா ?

போட்டி நடக்கும் BARSAPARA மைதானத்தில் விராட் கோலி பீல்டிங் பயிற்சி மேற்கொண்டபோது, இடது கை சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கோலிக்கு மருத்துவ ஆலோசகர் நிதின் படேல் சிகிச்சை அளித்தார். காயம் குணமடையும் பட்சத்தில் கோலி போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்