காரைக்குடி அணியை வீழ்த்தியது தூத்துக்குடி : சுப்பிரமணிய சிவா அதிரடி - 87 ரன்கள் குவித்தார்
காரைக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில், சுப்பிரமணிய சிவா அதிரடியால் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற டூட்டி பேட்டரியாட்ஸ் கேப்டன் சுப்ரமணிய சிவா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் மூன்று ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் சுப்பிரமணிய சிவா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன் குவித்தார். அவரோடு ராஜ கோபால் மற்றும் வெங்கடேஷ் கைகோர்க்க, 20 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி, 175 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய காரைக்குடி அணியில், சூர்ய பிரகாஷ் மற்றும் அஷ்வின்குமார் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தூத்துக்குடி அணியின், தமிழ்குமரன், செந்தில்நாதன், வெங்கடேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் தூத்துக்குடி அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story