கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கோரிய வக்கார் யூனிஸ்..!
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ், நோன்பு நேரத்தில் தாம் கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்த நாளை வீரர்கள், கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வக்கார் யூனிஸ், ரமீஸ் ராஜா உள்ளிட்டோர் கேக் உண்ட காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது. நோன்பு காலத்தில், கிரிக்கெட் வீரர்கள் கேக் உண்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள வக்கார் யூனிஸ், நோன்பு காலத்தில் கேக் சாப்பிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
Next Story