விவசாயிகள் வயிற்றில் பாலைவார்த்த அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கோதுமை, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஒரு குவிண்டாலுக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரத்து 275 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடலைப்பருப்பு ஆதார விலை குவிண்டாலுக்கு 105 ரூபாயும், பார்லி குவிண்டாலுக்கு 115 ரூபாயும், கடுகு ஒரு குவிண்டாலுக்கு 200 ரூபாயும், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு 425 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அரசு தொடங்கிய பல்வேறு திட்டங்களின் விளைவாக வேளாண் பெயர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story