"கார்த்திகை இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்" - அமைச்சர் சேகர்பாபு அதிரடி | DMK
நாமக்கல் நரசிம்ம சாமி கோயிலுக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு, நாமகிரி தாயாரை தரிசித்தபின், தல விருட்ச கன்று நட்டு வைத்தார். பின்னர் நரசிம்ம சாமியை தரிசனம் செய்துவிட்டு, ஆஞ்சநேயர் கோயிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாகவும், 5 ஆண்டுக்குள் 20 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். 5 ஆயிரத்து 436 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஆயிரத்து 680 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார். சோளிங்கரில் ரோப் கார் திட்டத்தை கார்த்திகை மாதம் இறுதிக்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்
Next Story