விஜயின் அடுத்த அதிரடி - புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அப்டேட்
விஜய் மக்கள் இயக்கம் அடுத்தக்கட்ட பரிமாணத்தை நோக்கி பயணிப்பதாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐ.டி பிரிவு ஆலோனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அந்த இயக்கத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அடுத்த மாதம் நடைபெற உள்ள லியோ இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக விஜய் நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்க இருப்பதாக கூறினார். எக்காரணம் கொண்டும் ஜாதி, மதம் கொண்டு செயல்படாமல், நம்பிக்கையின் பேரில் மட்டும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒரு தொகுதியில் 6 பேர் வீதம் 234 தொகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் வந்திருப்பதாக கூறினார்.