சட்டப்பேரவையில் இன்று கேப்டன் விஜயகாந்துக்கு.. பரபரப்பாக கூடும் உறுப்பினர்கள்

x

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள்

காலை 10மணிக்கு சட்டப்பேரவை தொடங்கும்

பேரவை தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

தொடர்ந்து மறைந்த இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

அதன் தொடர்ச்சியாக, வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கும். இதில் உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, முத்துசாமி, சிவசங்கர், சேகர்பாபு, மதிவேந்தன் உள்ளிட்டோர் பதிலளித்து பேச உள்ளனர்.

தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு நிலவரம், மழை வெள்ள பாதிப்பு நிவாரணம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனை, இலவச வேட்டி சேலை ஊழல், முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன் மொழியவுள்ளார்.

அதில், தமிழ்நாடு அரசால் ஏற்பளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் 46 பக்கங்களில் முதல் பக்கத்தை மட்டும் படித்தும், தானகவே சில பக்கங்களை இணைத்தும் ஆளுநர் உரையாற்றிதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாகவும்,

இதை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஆளுநர் உரைக்கு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது..

மேலும், சட்டப்பேரவையில் ஆளுநரின் பேச்சு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.. அத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுப்பெறும்.


Next Story

மேலும் செய்திகள்