நாட்டை உலுக்கிய 121 மரண ஓலம்.. ராகுல் எடுத்த முடிவு
ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தோரை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை செல்ல உள்ளார். 121 பேரை உயிரிழந்த விவகாரத்தில், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை ஹத்ராஸ் செல்ல உள்ளார். அங்கு, உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆருதல் கூறும் ராகுல் காந்தி, காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.
Next Story