திருப்பூரில் கொடிக்கம்பம் - தவெக நிர்வாகிகள் எடுத்த முடிவு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாகவும், அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும், காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story