சீமான் கேட்ட சின்னம்.. - `கரும்பு விவசாயி’ வேட்பாளர் திடீர் டுவிஸ்ட்..
திருப்பூர் மக்களவை தொகுதியில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் சந்திரசேகர் தனது வேட்பு மனுவை இன்று திரும்ப பெற்றார். கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் வேட்பு மனுவை திரும்ப பெற்றதாக அவர் கூறிய நிலையில், வாக்குப்பதிவின் போது கரும்பு விவசாயி சின்னம் இடம்பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story