"நீட் போராட்டத்தில் அனிதா தியாகி" காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு
"நீட் போராட்டத்தில் அனிதா தியாகி"
காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு
12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற தமிழ்நாடு அரியலூரைச் சேர்ந்த அனிதாவுக்கு நீட் மதிப்பெண்ணை காரணம் காட்டி மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை என்றும், அந்தப் போராட்டத்தில் அவர் உயிர் துறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இன்று, நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று இருப்பதை பார்க்கும்போது, இந்த முறை நீட் தேர்வு எவ்வளவு நியாயமற்று ஒரு தலை பட்சமாக இருந்துள்ளது என்பதை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அனிதா தியாகி என்று கூறி அனிதாவின் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அவரது சட்டப் போராட்டம் ஆகியவை குறித்த விரிவான பதிவு கேரள காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story