"ஆவின் விலை உயர்வு" - ஒரே போடாக போட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
ஆவின் விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருட்களின் விற்பனை விலையை மட்டும் உயர்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகை வரவிருக்கும் நிலையில், பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Next Story