"நிச்சயம் நடக்கும்..!" - அமித்ஷா உறுதி | Amit Shah | BJP

x

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களிடம் மாற்றத்தின் மனநிலை காணப்படுவதாக தெரிவித்தார். ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்த ராஜஸ்தான் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தீர்மானித்து விட்டதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண்களும், பட்டியலினத்தவரும் மிக மோசமான நிலையில் இருந்ததாக குற்றம் சாட்டிய அவர்,

வாக்கு வங்கி அரசியல் காரணமாக வன்முறையாளர்கள் மீது கெலாட் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்