கடன் பிரச்சினை-திமுக பிரமுகர் தற்கொலை-ஒருவர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கடன் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு துண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மேலவை பிரதிநிதியாக இருந்து வந்த கல்லூரைச் சேர்ந்த பைரோஸ் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது... கடன் கொடுத்த இஸ்பூர் ரகுமான் கடந்த மாதம் ஜூலை மூன்றாம் தேதி இரவு பைரோஸ் வீட்டிற்கு சென்று கடனை கேட்டு அழுத்தம் கொடுத்தது ஆபாசமாக திட்டியதாகக் கூறப்படும் நிலையில் மன உளைச்சலில் இருந்த பைரோஸ் ஜூலை 4ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் இஸ்பூர் ரகுமானை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story