அதிமுக ஆட்சியில் வழங்கவிருந்த கிரைண்டர்கள் அகற்றம்.. புகாரின் பேரில் நடவடிக்கை

x

அதிமுக ஆட்சியில் வழங்குவதற்காக வாங்கப்பட்ட விலையில்லா கிரைண்டர்களை செங்கல்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், ஏராளமான கிரைண்டர்கள் பதுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், 8 ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்த கிரைண்டர்கள் பூச்சி அரித்தும், துரு பிடித்தும் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக, இரவோடு இரவாக அவற்றை அதிகாரிகள் அகற்றினர். மக்களின் வரிப்பணத்தை வீணடித்த அப்போதைய அதிகாரிகள் யார் காரணமோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்