"மடிந்த 700 பேரின் உயிர்... மோடி அரசு செய்ததை மறைக்க முடியாது" - ராகுல் காட்டம்

x

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த துரோகத்தை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மோடி அரசின் பிரச்சார இயந்திரம், தொடர்ந்து விவசாயிகளை இழிவுபடுத்துவதில் மும்முரமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 378 நாட்கள் நீடித்த போராட்டத்தின்போது, 700 பேரை தியாகம் செய்த விவசாயிகளை, பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அந்நிய சக்திகளின் பிரதிநிதிகள் என்று பாஜக எம்.பி. கூறியிருப்பது, அக்கட்சியின் விவசாயிகள் விரோத கொள்கைக்கு மற்றொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறைந்தபட்ச ஆதார விலை குறித்த தனது நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும், உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்