ராகுல் காந்தி யாத்திரை 2.0 - டார்கெட்-ல் 14 மாநிலங்கள்

x

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரையை ஜனவரி 14ம் தேதி தொடங்கவுள்ளார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்களை உள்ளடக்கி சுமார் 4 ஆயிரத்து 500 கி.மீ தூரம் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரையை தொடங்கவுள்ளார். 14 மாநிலங்களை உள்ளடக்கி 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள இந்தப் பயணம் மும்பையில் மார்ச் 20ம் தேதி முடிவடையவுள்ளது. நாட்டு மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியைப் பாதுகாப்பதற்காக நியாய யாத்திரை அமையும் என்றும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கொடியசைத்து இந்த யாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்