நிதிஷ் -க்கு இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவி..? - ராகுல் எடுக்கப்போகும் முடிவு

x

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், கேசி வேணுகோபால் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த மாநிலங்களில், தோல்வி குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படுவதாக ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராவது குறித்து ராகுல் காந்தி விரைவில் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவி வழங்க இந்தியா கூட்டணி முன்வந்ததா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அது பற்றி தங்களுக்கு தெரியாது" என ஜெயராம் ரமேஷ் மழுப்பினார்.

மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதில் கலந்து கொள்வது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசிப்போம் என்றும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்