இன்று முதல்... நீலகிரி மக்களுக்கு பெரிய குட் நியூஸ்

x

மலை மாவட்டமான நீலகிரியில் இன்று முதல் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். உதகையில் மகளிருக்கான விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் சிவசங்கர், கா.ராமச்சந்திரன், திமுக எம்பி ஆ.ராசா, மாவட்ட ஆட்சி தலைவர் அருணா ஆகியோர், கலந்து கொண்டு, திட்டத்தை விரிவாக்கம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் படி உதகை மற்றும் குன்னூர் நகரில் மட்டுமே இயக்கபட்டு வரும் 11 அரசு பேருந்துகள், இன்று முதல் 99 பேருந்துகளாக அதிகரிக்கபட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்