நீட் தேர்வு... - முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் பதிவு
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், நீட் தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்.... ஆனால் இதற்கு மாறாக, மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story