"Coaching-க்கு புகழ்பெற்ற நகரிலே நீட் மரணம்..இதை ஒழிக்க ஒரே வழி" - அன்புமணி ராமதாஸ் கொடுத்த ஐடியா

x

நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள விடுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவதாகத் தெரிவித்துள்ளார். நுழைவுத்தேர்வுக்கு தயாராக முடியாதவர்களும், தேர்வில் தோல்வியடைந்தவர்களும் என, கடந்த ஆண்டில் 15 பேரும், நடப்பாண்டில் 20 பேரும் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மின்விசிறிகளில் மாணவர்கள் அதிகம் தூக்கிட்டுக் கொள்வதால், மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுகின்றன - ஆனால், இது நிரந்தரமான தீர்வு அல்ல என தெரிவித்துள்ளார். 20 லட்சம் ரூபாய் செலவழித்த பிறகும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதபோது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குவதாகவும், இதிலிருந்து மாணவர்களைக் காக்க அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்