சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..! | MK Stalin
தலைநகர் டில்லிக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர், சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு சென்றார். அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்பு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உடன் இருந்தனர்.
Next Story