அமைச்சர் பொன்முடி வழக்கு.. சாட்சி சொன்ன தாசில்தார்
அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக
அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில்
முக்கிய முதல் சாட்சியான ஓய்வு பெற்ற தாசில்தார் அரசுக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக
அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகளின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சதானந்தன், கோத குமார், ஜெயச்சந்திரன், கோபி நாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியும், வழக்கின் புகார்தாரரும், முன்னாள் தாசில்தாரும் ஆன குமாரபாலன், உடல்நிலை சரியில்லாததால், சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கு விசாரணை வியாழனன்று நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.