அமைச்சர் பொன்முடி வழக்கு.. "ஆதாரம் இல்லை" என ஐகோர்ட்டில் வாதம்
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு, எந்த ஆதாரங்களும் இல்லை என அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை, தங்களது புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்தது. தொடர்ந்து பொன்முடி தரப்பு வழக்கறிஞர், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகத் தெரிவித்தார். பொன்முடியின் மனைவி தனியாக வர்த்தகம் செய்வது கணக்கில் கொள்ளப்படவில்லை எனவும், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை எனவும் அவர் வாதிட்டார். வழக்கின் வாதங்கள் முடிவடையாததால், வழக்கு விசாரணை வரும் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.