அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் போட்ட அதிரடி உத்தரவு

x

புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் செயல்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனே பொது ஏலத்திற்கு கொண்டு வருமாறும், அரசுக்கு மேலும் வருவாய் சேர்க்கவும், உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்