தலைகீழான கர்நாடக அரசியல்... பிரஜ்வால் விவகாரம்... ராகுல் திடீர் கடிதம்

x

டிசம்பர் 2023 வரை, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், இதைவிட அதிர்ச்சியான விஷயம், இந்த கொடூரமான குற்றச்சாட்டுகள் பாஜகவின் மூத்த தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், பிரதமர் ஒரு வெகுஜன பலாத்கார குற்றவாளிக்காக பிரச்சாரம் செய்ததாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்... மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஆசியுடன் பிரஜ்வால் ரேவண்ணா சுதந்திரமாக திரிந்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் சாடியுள்ளார். தனது 2 தசாப்த கால பொதுவாழ்வில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பார்த்துக்கொண்டு மௌனத்தை சாதிக்கும் மூத்த தலைவரை தான் சந்தித்ததில்லை என்றும் சாடியுள்ளார்... பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதுணையாக இருந்து செய்யுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிவுறுத்திய ராகுல் காந்தி, இந்த கொடூரமான குற்றங்களுக்கு காரணமான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கூட்டு கடமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்