"எல்லாம் தெரிஞ்சும் பிரஜ்வாலுக்கு ஆதரவா பிரசாரம்... இப்போவாதும் வாய திறங்க மோடி.."
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக எம்பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்...
பிரஜ்வால் ரேவண்ணா 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து இருப்பதோடு அதனை வீடியோ பதிவு செய்திருக்கும் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடூரமான குற்றங்களுக்கு எதிராக பிரதமர் மோடி வழக்கம் போலவே வெட்கக் கேடான மௌனம் காப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லாம் தெரிந்திருந்தும் அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி பெரும் குற்றவாளி மிக எளிதாக நாட்டை விட்டு எப்படி தப்பியோடினார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடியின் மௌனம் நாடு முழுவதும் குற்றவாளிகளின் மனவலிமைக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதும் மோடி உத்தரவாதத்தின் ஒரு அங்கமா எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.