மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதறியடித்து விளக்கம் தந்த கங்கனா ரணாவத்
தான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாகத் தவறான தகவல் பரப்பப் படுகிறது என ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலில் இமாசல பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள கங்கனா மாட்டிறைச்சி சாப்பிடுவதாக ஒரு செய்தி உலா வந்தது... இந்நிலையில், தான் மாட்டிறைச்சியோ அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியோ சாப்பிடுவதில்லை என தெரிவித்த அவர்,
தன்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக் கேடானது என சாடினார்...
தான் பல தசாப்தங்களாக யோகம் மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்த கங்கனா, தன் பெயரைக் கெடுக்க எந்த தந்திர வேலையும் எடுபடாது என்றும், தன் மக்களுக்கு தான் ஒரு பெருமை மிக்க இந்து என்பது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.