"கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.11,000" - பரபரப்பை கிளப்பிய பா.ஜ.க. தலைவர்

x

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 11 ஆயிரம் ரூபாய் தரப்படும் என பா.ஜ.க. மாநிலத்தலைவர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை பயத்தால் ஹேமந்த் சோரன் காணாமல் போனதாக ஜார்கண்ட் பா.ஜ.க மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார். மத்திய ஏஜென்சிகளுக்கு பயந்து கடந்த 40 மணி நேரமாக முதல்வர் ஹேமந்த் சோரன் காணாமல் போய் முகத்தை மறைத்துக்கொண்டு ஓடுவதாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மக்களின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் கண்ணியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்