அவதூறு வழக்கில்...ராகுல் காந்திக்கு விலக்கு..ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

மோடி பெயர் விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்து வரும் ராஞ்சி எம்பி - எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம், அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ராகுல் காந்தி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக இருப்பதை சுட்டிக்காட்டி, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது. ராகுல் காந்திக்கு பதிலாக அவரது வழக்குரைஞர் ஆஜராகவும் அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்